முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்... சாய்ரா பானு அதிரடி பதிவு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி, சாய்ரா பானு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானுவை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவரின் பிரிவு சமீபத்தில் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சாய்ரா பானு போட்டுள்ள பதிவு ஒன்றில், ரஹ்மான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். முன்னாள் மனைவி என்று கூற வேண்டாம். நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை... பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவருக்கு எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை. நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என சாய்ரா பானு கூறியுள்ளார்.
29 ஆண்டு காலமாக திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த சாய்ரா பானு, உடல்நல பிரச்சனையால் மும்பையில் சிகிச்சையில் உள்ளதாகவும், இதனால் பிரிந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |