இந்தியாவில் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் அழகான கிராமம் எது தெரியுமா?
இந்த உலகத்தில் சூரியன் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு நேரத்தில் உதிக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் அழகான கிராமம் எது தெரியுமா? அதைப்பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கக் கூடிய அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் அஞ்சா மாவட்டத்தில் உள்ள டோங் என்ற சிறிய கிராமமே நாட்டில் தினசரி சூரிய உதயத்தை காணுகின்ற சிறப்பை பெற்றுள்ளது.

இந்தியா சீனா மற்றும் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் முக்கோண பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷமாகவே உள்ளது. இங்கே கோடைகாலங்களில் காலை 4.30 மணிக்கு சூரிய பகவான் உதித்து விடுகிறார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1240 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு செல்ல வாலாங் என்ற பகுதியிலிருந்து சிறிய மலைப்பயணம் நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணத்தில் நாம் லோகித் மற்றும் சதி ஆகிய நதிகள் ஒன்று சேரக்கூடிய சங்கமத்தை பார்க்கலாம்.
2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி இந்த கிராமத்தில் பழங்குடியினரை சேர்ந்த சுமார் 15 நபர்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இவர்களின் எளிய வாழ்க்கை முறையும் இவர்களுடைய அழகான புன்னகையும் சுற்றுலா செல்லக்கூடிய மக்களை வெகுவாக கவர்வது குறிப்பிடத்தக்கது.

அடர்ந்த காடுகள் பணி சூழ்ந்த மலை சிகரங்கள் மற்றும் அமைதியான சூழல் நிறைந்த இந்த டோங்கு கிராமம் இயற்கை விரும்பக் கூடிய நபர்களுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் ஒரு சிறந்த இடமாகவே இருக்கும்.
இங்கு பயணிகள் முதலில் தேஸு அல்லது திப்ருகர் அடைந்து பிறகு அங்கிருந்துதான் அவர்கள் டோங்க கிராமத்தை சென்றடைய முடியும். மேலும், அருணாச்சல பிரதேசத்திற்குள் நாம் செல்வதற்கு இந்திய குடிமக்களுக்கு உள்வரி அனுமதிச்சீட்டு கட்டாயம் வேண்டும்.
அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு இல்லாததால் இங்கு இயற்கை தூய்மையுடனும் அழகுடனும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.