Relationship Facts: இந்த 4 நபர்களை திருமணம் செய்யாதீங்க- நரகமாகி விடும்
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம் என எமது முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் குறிப்பிட்ட சிலரை எந்த காரணமும் கொண்டு திருமணம் செய்யக் கூடாது என சொல்லப்படுகின்றது.
சிலர் காதலிப்பார்கள் அவர்களை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்வார்கள். மாறாக இவர்கள் குறிப்பிட்ட சில காலங்கள் வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்றுக் கொள்கிறார்கள்.
இப்படியான தவறுகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. திருமணம், காதல் இரண்டும் தான் மனிதர்களின் மனதுடன் சம்மந்தப்பட்ட வெற்றியை கொடுக்கின்றது.
இதனால் இவை இரண்டிலும் பொறுமையாக முடிவுகளை எடுக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று யாராலும் சொல்ல முடியாது, இப்படி இருந்தாலும் குறிப்பிட்ட சிலரின் குணத்தை தெரிந்து கொண்டால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என கணிக்கலாம்.
அந்த வகையில், எக்காரணம் கொண்டும் திருமணம் செய்யக் கூடாத குணம் கொண்டவர்கள் எப்படி இருப்பார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
திருமணம் செய்யக் கூடாத 4 நபர்கள்
1. பிரம்மச்சரியம் வாழ்க்கையை விரும்பும் நபர்களை ஒருபோதும் திருமணம் செய்யக்ககூடாது. ஏனெனின் இவர்கள் பார்ப்பதற்கு அப்பாவிகள் போல் இருப்பார்கள். இறைவனுக்காக அவர்களின் வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதால் உங்களின் திருமண வாழ்க்கை முற்றுப்பெறலாம். நீங்கள் திருமணம் பற்றி பல நாட்கள் கண்ட கனவுகள் அனைத்தும் பலாகி விடும்.
2. சிலர் உடல் நிலை சரியில்லாதவர்களை திருமணம் செய்து கொள்வார்கள். இதனால் உங்களின் திருமண வாழ்க்கை நரகமாக இருக்கும். பையனோ, பெண்ணோ இருந்தாலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் எக்காரணம் கொண்டும் திருமணம் செய்ய விரும்பாதீர்கள். உடல்நலப் பிரச்சினை காலப்போக்கில் உறவில் விரிசலை உண்டு பண்ணும்.
3. போதைக்கு அடிமையாக இருக்கும் நபர்களை திருமணம் செய்ய வேண்டாம். இது உங்களின் திருமண வாழ்க்கையில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும். போதைக்கு அடிமையாக இருப்பவர்கள் துணைக்காக அதிலிருந்து மீண்டு வந்ததது போல் நடிக்கலாம். ஆனால் அவர்களால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்க முடியாது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் போதைக்கு அடிமையானவர்களுக்கு பெண் கொடுக்காமல் இருப்பது குடும்பத்தையே காப்பாற்றும்.
4. உழைக்காத கணவனை திருமணம் செய்யும் பெண்கள் சாபம் பெற்றவர்களாக சமூகத்தில் பார்ப்பார்கள். குடும்ப செலவுக்கு கூட ஒரு நபரால் பணம் செலவு செய்யாமல் இருந்தால் அவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியற்றவராக பார்க்கப்படுகிறார்கள். உழைக்காத கணவனுடன் வாழும் வாழ்க்கை நரகம் போல் இருக்கும். பெற்றோர்களிடம் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் கணவன் சோம்பேறியாக இருந்தால் அந்த குடும்பம் செழிக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |