Transcatheter முறையில் நடந்த சிகிச்சை- ரஜினிகாந்த அறிக்கையில் சிக்கிய தகவல்
இதயம் தொடர்பான பிரச்சினையில் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையொன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
73 வயதிலும் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக ரஜினிகாந்த் பார்க்கப்படுகின்றார்.
இவர் நடிப்பில் இன்னும் சில நாட்களில் வேட்டையன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சென்னை-அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர சிகிச்சையில், ரஜினிகாந்திற்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
நாளைய தினம் இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சையில் இருக்கும் பொழுது வெளியான அறிக்கை
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் அறிக்கையொன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது, " திரு ரஜினிகாந்த் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து வெளியேறும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது."
அறுவை சிகிச்சை இல்லாமல், transcatheter முறையில் அந்த ரத்த நாளத்தில் stent பொருத்தப்பட்டது. திட்டமிட்டபடி சிகிச்சை நடந்து முடிந்தது. திரு. ரஜினிகாந்த் உடல்நிலை சீராக, நலமாக இருக்கிறது. அவர் இன்னும் இரண்டு தினங்களில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |