முடி துர்நாற்றம் வீசுகிறதா? அப்போ இந்த இலை அரைச்சு போடுங்க- கமகமக்கும்
பொதுவாக கோடைக்காலங்ககளில் மழை பெய்தால் அதனை பூமியில் இருக்கும் சூடு சூழலில் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.
அளவிற்கு அதிகமாக வியர்வை ஏற்படும். இதனால் சரும வியாதிகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
அத்தகைய நிலையில், தலை வியர்க்கும். இதனால் சிலரின் தலைமுடி துர்நாற்றம் வீசும்.
இப்படி துர்நாற்றம் வீசும் தலைமுடிக்கு ஒரு தீர்வு வேண்டும் என நினைப்பவர்கள் இயற்கையாக சூழலில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.
சிலருக்கு உச்சந்தலையில் இருக்கும் அழுக்கு காரணமாக இந்த பிரச்சினை வரலாம்.
அப்படியாயின் எப்படி தலைமுடியை வாசமாக வைத்து கொள்ளலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
துளசி
துளசியில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்றுக்களை நம்மிடம் இருந்து இல்லாமலாக்கி ஆரோக்கியத்தை தருகின்றது. இவ்வளவு சிறப்பு கொண்ட துளசியை தண்ணீரில் போட்டு கொஞ்சம் நேரம் வைத்து விடுங்கள்.
தலைமுடி துர்நாற்றம் வீசுபவர்கள் இந்த துளசி தண்ணீரை கொண்டு உங்களின் தலைமுடியை அலசலாம்.
துளசி இலையை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.
இது தலையில் இருக்கும் மோசமான பாக்டீரியாக்களை விரட்டி சுத்தமான வாசனையை கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |