தினமும் தயிர் சாப்பிட்டால் இந்த நோய் வராது- ஆய்வில் உறுதி!
வழக்கமாக நாம் உணவுகளுடன் கலந்து அல்லது தனியாக சாப்பிடும் தயிர் உடலுக்கு ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை தருகிறது.
பாலில் உள்ள நுண்ணுயிர்களின் நொதித்தல் மூலம் தயாரிக்கப்படும் தயிர் புளிப்புச் சுவையுடன் கெட்டித்தன்மையாக இருக்கும். இதனை பசு, எருமை மற்றும் சோயா பால் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கலாம்.
இந்த தயிர் உணவில் கலந்து சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் நோய் வராது என்ற கருத்து வைரலாக உள்ளது. இது தொடர்பான ஆய்வில் வெளியான தகவலை தொடர்ந்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் நோய்
தினமும் தயிர் உட்கொள்ளும் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ரத்த அழுத்தம் குறைந்து இதய நோய்க்கான காரணிகளும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உயர் ரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
பெரும் அளவிலான மக்கள் இதயம் தொடர்பான நோயினால் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து பார்க்கும் பொழுது ரத்த அழுத்தம் பிரச்சினையை கட்டுப்பாட்டில் வைக்கும் பொழுது இதயம் தொடர்பான நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
[LHY8EH]
பால் உணவுகளுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஏனெனின் பால் கலந்த உணவுகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக இருக்கும். இவை ரத்த அழுத்த பிரச்சினையை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.
அதனால் அளவுக்கு அதிகமாக தயிர் சாப்பிட வேண்டிய தேவையில்லை. சிறிதளவு தயிர் உட்க் கொண்டாலே போதுமானது என மருத்துவர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார். எனினும் உயர் ரத்த அழுத்தம் குறித்து நாம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |