பிராமணன்னா பெரிய கொம்பா? எனது அடையாளம் ஜாதி இல்லை.. டாக்டர் ஷர்மிளா நெத்தியடி
நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, ஜாதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதில் பலரது வரவேற்பை பெற்றுள்ளது.
ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் அநாகரீகமாக பேசுவது, அவர்களது உடலழகை வர்ணிப்பது உள்ளிட்ட பல தரக்குறைவான செயலில் ஈடுபட்டுள்ளான்.
விசாரணை நடத்திய போலீசார் அவனை கைது செய்து போக்ஸோ உட்பட 5 பிரிவின் கீழ் அவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. ஆசிரியரின் கேடுகெட்ட நடத்தையை கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா??!
— Dr Sharmila (@DrSharmila15) May 25, 2021
பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல
இந்த நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
PSBB பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியரை கண்டித்து டாக்டர் ஷர்மிளா போட்ட ட்விட்டிற்கு எதிர்வினையாற்றிய சிலர், பிறப்பால் நீங்களும் பிராமணர் தானே.
நீங்களே இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு டாக்டர் ஷர்மிளா அவர்களது நெத்திபொட்டில் அடித்தார் போல பதிலை தெரிவித்துள்ளார்.
பிராமணன்னா பெரிய கொம்பா. பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது. ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும். மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.