பாட்டி வயதில் இது தேவையா? நயன்தாராவின் திருமண சர்ச்சை! மருத்துவரின் அடுத்த பதிவு
நடிகை நயன்தாரா திருமணம் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த மருத்துவர் தற்போது மன்னிப்ப பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடந்தது. இந்நிலையில் டாக்டர் அறிவன்பன் திருவள்ளுவன் என்பவர் அது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் சர்ச்சை பதிவு
கமெண்ட் செய்ய வேண்டும் போன்று உள்ளது. நயன்தாராவின் நடிப்புத் திறமையை பாராட்டினாலும், 40, பாட்டி வயசுல குடும்பம், குழந்தைகளுக்கு திட்டமிடும் அவரின் செயலை பார்த்து பாவமாக இருக்கிறது. ஐ.வி.எஃப். மையங்களால் அவருக்கு உதவ முடியும் என நம்புகிறேன் என்றார்.
அறிவன்பனின் கருத்தை பார்த்த பலரும் அவரை விளாசினார்கள். பாடகி சின்மயியும் விளாசினார். இதையடுத்து மன்னிப்பு கேட்டு குறித்த மருத்துவர் பதிவு ஒன்றினை மீண்டும் போட்டுள்ளார்.


மன்னிப்பு கேட்ட மருத்துவர்
என் சக டாக்டர் தோழியான அனுஷா கார்த்திக்குடன் நான் சாட் செய்தது உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
எந்த பெண்ணின் கருமுட்டையும் 30 வயதுக்கு பிறகு வலுவிழந்துவிடும் என்பது தான் அந்த கமெண்ட்டுக்கான காரணம். நடிப்பில் இருந்து 5 ஆண்டுகள் பிரேக் எடுத்து குடும்பம், குழந்தைகளை கவனித்த ஜோதிகாவின் அறிவான முடிவை நாங்கள் டாக்டர் நண்பர்கள் பாராட்டி சாட் செய்தோம். நானும் நயன்தாரா ரசிகன் தான். அதனால் தான் அவர் லேட்டாக திருமணம் செய்து, குழந்தைகள் பெறுவது பற்றி அக்கறையுடன் பேசினேன்.
என்னுடைய கேஷுவல் கமெண்ட்டுக்காக நயன்தாரா ரசிகர் மன்றத்திடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கமெண்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, ஜட்ஜ் பண்ண வேண்டாம் என்று சின்மயி போன்றோரை கேட்டுக் கொள்கிறேன்.
இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று நான் ஒன்றும் வில்லன் இல்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
