இளம் வயதில் வயதானவர்கள் போல் இருக்கீங்களா? அதற்கு இந்த பழக்கம் தான் காரணம்
பொதுவாக சிலருக்கு அவரின் இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கம் மற்றும் கோடுகள் ஆகியவைகள் வந்து விடும்.
இதற்காக பல காரணங்கள் இருந்தாலும் தவறான உணவு பழக்கம் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
இதனை தடுக்க பலரும் சருமம் மீதான சிகிச்சைகள், கீரிம், பேக்கள் என்பவற்றை பயன்படுத்துவோம். ஆனால் இதனால் பெரிய அளவிலான தீர்வு கிடைக்காது.
அந்தவகையில் இளம் வயதில் இது போன்ற சுருக்கங்கள் வேண்டாம் என்றால் அதற்கான உணவு பழக்கங்கள் தொடர்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இளம் வயதில் வயதான தோற்றம் வர இது தான் காரணமா?
1. பதப்படுத்தப்பட்ட உணவு
நாம் எடுத்து கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவில் அதிகப்படியான சோடியம் இருக்கின்றது. இது சருமத்தை சேதப்படுத்தும். தொடர்ந்து சில சமயங்களில் இதனால் நீர் தேக்கம், வீக்கம் மற்றும் கொலாஜன் குறைபாடு போன்றவை ஏற்படும்.
2. காஃபின்
பொதுவாக காலையில் சிலர் டீ அல்லது காபி இல்லாமல் படுக்கையை விட்டு எழும்பமாட்டார்கள். ஆனால் இந்த பழக்கம் அவர்களை சீக்கிரமாக முதுமையாக்கிவிடும் என அவர்களுக்கு தெரியாது. காபியிலுள்ள காஃபின் என்ற பதார்த்தம் தோலில் இருக்கும் ஈரத்தன்மையை இல்லாமலாக்கும்.
3. சர்க்கரை
சர்க்கரை சாப்பிடுவதால் அதிகமான நோய்கள் தான் ஏற்படுகின்றது. இதனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும். இளமையாக இருக்க வேண்டும் என்றால் அதிகப்படியான சர்க்கரை சாப்பிடாதீர்கள்.