வாட்ஸ் அப்-பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Meta AI... இதன் பயன்பாடு என்ன?
Meta நிறுவனம் AI அம்சத்தினை வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்திய நிலையில், இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகில் AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
அதாவது ஒரு கணினி மனிதனைபோன்று யோசித்தால், அல்லது மனிதன் போன்று செயல்படுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு உதவுவதால், பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் AI தளங்களை உருவாக்கி வருகின்றது.
அந்த வகையில் மெட்டா நிறுவனமும் தனது வாட்ஸ் அப்பில் AI தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இவை முகநூல், இன்ஸ்டா இவற்றிலும் பயன்படுத்த முடியுமாம்.
தினசரி பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு Meta AI உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்-ல் எப்படி Meta AI ஐ பயன்படுத்துவது?
உங்களது வாட்ஸ் அப் செயலியியில் புதிய ஐகான் ஒன்று ஒன்று உள்ளது. அதாவது வாட்ஸ் அப்பை திறந்தால் ப்ளூ கலரில் வட்டமாக இந்த ஐகான் காணப்படும்.
இதனை நீங்கள் அழுத்தினால் Meta AI சேட் திறக்கும். அதில் உங்களுக்கு தேவையான கேள்விகள், தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அதாவது எதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதனை ஓரிரு வார்த்தையினை போட்டால் போதும், அனைத்து தகவலும் உடனே கிடைத்துவிடும்.
சுவாரஸ்யமாக, Meta AI ஆனது "இமேஜின்" என்ற தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பயனர்களை உருவாக்க அனுமதிக்கிறது. மற்றும் அவர்களின் அரட்டைகளில் இருந்து நேரடியாக AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிரவும்.
Meta AI உடனான உங்கள் தொடர்புகளில் "Imagine" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சில விஷயங்களைச் உருவாக்கலாம்.
இதன் மூலம் நீங்கள் உரை மற்றும் படங்களை உருவாக்கலாம், நீண்ட உரைகளை சுருக்கவும் மற்றும் எழுதும் பணிகளைச் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |