இணையத்தில் நோய் அறிகுறிகளை தேடுகிறீர்களா? இந்த உண்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த ஆரோக்கியத்தின் மீதான அக்கறை, காலப்போக்கில் நோய் குறித்த அளவுக்கு மீறிய பயமாக (Fear of Illness) மாறிவிடுகிறது.
இதுவே பல்வேறு மனநலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், உடலில் ஏற்படும் சாதாரண தலைவலி, வயிற்றுவலி அல்லது சிறிய உடல்நலக் குறைபாடு போன்றவற்றுக்குக்கூட பலர் முதலில் இணையத்தில் தேடுகின்றனர்.

நோய் மீதான பயம்
அப்போது கிடைக்கும் தகவல்களில் கடுமையான நோய்களின் அறிகுறிகளும் இடம்பெறுவதால், "எனக்கும் அதே நோய்தான் இருக்குமோ?", "இது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறிவிடுமோ?" என்ற அச்சம் அவர்களிடம் உருவாகிறது.
இந்தப் பழக்கம், தேவையற்ற கவலை, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகிறது. இணையத்தில் கிடைக்கும் பொதுவான மருத்துவத் தகவல்களை தங்களின் உடல்நிலையுடன் ஒப்பிட்டு தவறான முடிவுகளுக்கு வருவதால், மனநலமும் பாதிக்கப்படலாம் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறிய உடல்நல அறிகுறிகளையே பெரிய நோய்களின் அடையாளமாக கற்பனை செய்து பயப்படுவது ஏன் ஏற்படுகிறது? இந்தப் பழக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது? போன்ற முக்கியமான கேள்விகளுக்கான விளக்கங்களையும் பயனுள்ள ஆலோசனைகளையும் இந்தக் காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |