இதயத்துடிப்பு முதல் ரத்த அழுத்தம் வரை... நமது உடம்பில் எந்த அளவு இருக்கனும்னு தெரியுமா?
மனித உடலில் இயங்கும் இதயம், ரத்த ஓட்டம், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை உட்பட அனைத்திற்குமான அளவுகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மனித உடல்
பொதுவாக மனித உடல் பல உயிரணுக்கள், திசுக்கள், உறுப்புக்கள் மற்றும் மண்டலங்கள் இவற்றினால் ஆன ஒரு அமைப்பாகும்.
நாம் உயிர்வாழ்வதற்கு தேவையான உடலியல் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கின்றது.
இதில் முக்கியமான உறுப்பாக இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் இருக்கின்றது. இவை நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கியமான உறுப்பாகும்.
ஒரே மாதிரியான உயிரணுக்கள் இணைந்து திசுக்களாகவும், திசுக்கள் இணைந்து உறுப்புகளாகவும் உருவாகியுள்ளது.
மேலும் இவ்வாறு அமைந்து உறுப்புகள் மண்டலங்களாகவும் செயல்படுகின்றது. அதாவது செரிமான மண்டலம், சுவாச மண்டலம் என்பதாகும்.

இதில் இதயம் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தினை உள்ளே கொண்டுவருவதும், மற்றும் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்வதுமாக இருக்கின்றது.
இவ்வாறு இந்த இயக்கத்திற்கு குறிப்பிட்ட அளவு இருக்கின்றது. அதுமட்டுமின்றி இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் வேகமும் மிகவும் முக்கியமாகும். இவற்றினை தான் ரத்த அழுத்தம் என்று கூறுகின்றோம்.
மனித உடம்பில் எவ்வளவு வெப்பநிலை இருக்க வேண்டும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை இவை அணைத்திற்கும் அளவு உள்ளது.
இதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |