ஞாபக மறதியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த நடைமுறையை கட்டாயம் செய்தால் போதும்
ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களுக்கு சில சுலபமான டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது.
சில நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஞாபக மறதியை கட்டுப்படுத்த
தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு என்று கூறப்படுகின்றது. 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்திற்கு மட்டுமின்றி, ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தையும் குறைப்பதற்கு உதவுகின்றது. மேலும் நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்த செய்கின்றது.
பொதுவாக வலது கைகளினாலே அனைத்து வேலைகளையும் செய்யும் நாம் அவ்வப்போது இடது கையையும் உபயோகப்படுத்த வேண்டும். இது மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், ஞாபக மறதியின் வீரியத்தையும் குறைக்குமாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மூளை சிறப்பாக செயல்படுவதற்கு உதவும். மூளைக்கு ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம், யோகாசனங்களும் நல்ல பலன் கொடுக்கும். யோகா செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், நினைவுத்திறனும் மேம்படும்.
Witthaya Prasongsin / Getty Images
உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |