கல்லீரலை பாதிக்கும் இந்த உணவை சாப்பிடாதீங்க... பாரிய பிரச்சினை ஏற்படும்
நாம் அன்றாடம் வாழ்கையில் பல்வேறு செயற்பாடுகளில் செயற்படுகின்றோம். அவ்வாறு வேலைகளை இலகுவாக செய்வதற்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவதுடன், சிறந்த உடற்பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
உடலின் வெளிப்புறத்தை மட்டும் கவனித்தல் போதாது. உடல் உள் உறுப்புக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே உடலுக்கு நல்லது. அப்படி இல்லையென்றால் பக்க விளைவுகளை உண்டாக்கி நோய்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில் எமது கல்லீரலை பாதிக்கும் உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல்
நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கல்லீரலின் நலன் மிகவும் முக்கியமாகும். இது உடலின் உற்பத்தி மையமாக இருக்கிறது. ஆகையால் இதிலுள்ள நச்சுக்கள் நமக்கு பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுகள் மற்றும் பானங்களை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
அதிக இனிப்புக்கள் சேர்த்த உணவுகளை சாப்பிட கூடாது. ஆரோக்கியமற்ற உணவு பதார்த்தங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியமான உணவை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தானியங்கள், இனிப்புகள், கேக் போன்ற அனைத்து இனிப்பு சேர்க்கப்பட்ட பொருட்களையும் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் கல்லீரலில் ஏற்படக்கூடிய அழுத்தம் குறைவதற்கு உதவியாக இருக்கும்.
உருளை கிழங்கு, வெள்ளை அரிசி, பிரெட் போன்ற மாவுச்சத்து உள்ள உணவுகள் எளிதாக செரிமானம் ஆகும். ஆனால் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
கல்லீரல் நோய் வருவதற்கு இதுபோன்ற உணவுகள் முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆகவே மாவுச்சத்து நிறைந்த இந்த உணவுகளை தினமும் குறைவான அளவு உட்கொள்ள வேண்டும்.
பர்கர், பீட்ஸா, வறுத்த உணவுகள் அதிகளவு கொழுப்பு உள்ளது. இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு சிரோசிஸ் நோய் உண்டாகிறது.
அதோடு கொழுப்பு கல்லீரல் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. அதிக உப்பு நிறைந்த உணவுகள் கல்லீரலின் செயல்பாட்டை பாதித்து உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
சிவப்பு இறைச்சி வகையால் அதிகப்படியான புரதம் உடலில் சேர்வதால் பல்வேறு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் உருவாகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |