அடிவயிற்கு கொழுப்பு கரைய இந்த உடற்பயிற்சிகளை செய்ங்க
வீணாக தேங்கி நிற்கும் அடிவயிற்கு கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சிகளை பதிவில் பார்க்கலாம்.

அடிவயிற்கு கொழுப்பு
உடலில்தேவையற்ற கொழுப்புகள் அடிவயிற்றில் தான் தங்கும். உடலின் மற்ற பாகங்கள் மெலிவாக இருந்தாலும் தொப்பை வயிற்றின் காரணமாக ஆடை அணிவர் மிகவும் கடினமாக இருக்கும்.
இதற்கு நாம் தினமும் ஒரு உடற்பயிற்ச்சி செய்தால் நினைத்தபடியே வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்க முடியும்.
இது கீழ் உடல் கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் ஒரு உடற்பயிற்சியாகும். இதற்கு உடற்பயிற்சிக் கூடமோ அல்லது கனமான இயந்திரங்களோ தேவையில்லை; உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் இதை நீங்கள் எளிதாகச் செய்யலாம்.
அந்த வகையில் கொழுப்பை குறைக்கு ஸ்குவாட்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளையும், அதை எப்படிச் செய்வது என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.

ஸ்குவாட்ஸ்
கலோரிகளை எரிக்கிறது
ஸ்குவாட்ஸ் ஒரு கூட்டுப் பயிற்சியாகும், அதாவது இது ஒரே நேரத்தில் பலவிதமான தசைகளையும் மூட்டுகளையும் பயன்படுத்துகிறது. இது உடல் எடை குறைவதற்கும் கொழுப்பை எரிப்பதற்கும் உதவுகிறது.

உடல் வலிமையை அதிகரிக்கிறது
தினமும் ஸ்குவாட் பயிற்சி செய்வது உடல் வலிமையை அதிகரிக்கிறது. இது இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.
மேலும், இது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதால், எழுவது, உட்காருவது அல்லது படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அன்றாடச் செயல்களை எளிதாக்குகிறது.
தினமும் ஸ்குவாட்ஸ்செய்வது உங்கள் தொடைகள், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. இந்த சிறந்த கூட்டுப் பயிற்சி உங்கள் கீழ்ப்பகுதியை உறுதியாக்குவது மட்டுமின்றி, சமநிலை மற்றும் உடல் தோரணையை மேம்படுத்தவும் உதவுகிறது.

எப்படி செய்வது?
ஸ்குவாட் செய்ய, முதலில் நேராக நின்று, உங்கள் பாதங்களுக்கு இடையில் சிறிதளவு இடைவெளி விடவும். இப்போது, மெதுவாக உங்கள் முழங்கால்களை வளைத்து, நாற்காலியில் அமர்வது போல் குனியவும்.
உங்கள் முதுகை நேராக வைத்திருக்கவும், முழங்கால்கள் உங்கள் கால்விரல்களைத் தாண்டக்கூடாது. சில வினாடிகள் அப்படியே இருந்துவிட்டு, பின்னர் உங்கள் இயல்பான நிலைக்குத் திரும்பவும்.
ஆரம்பத்தில், 10-15 ரெப்கள் கொண்ட இரண்டு செட்களைச் செய்து, படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கவும். இதை தினமும் செய்தால் அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |