அவர் செய்த இதை மட்டும் மறக்க முடியாது! கணவரை பற்றி தேவயானி ஓபன் டாக்
நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் கூறிய விடயம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

நடிகை தேவயானி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் ரஜினி கமல் அஜித் கமல்ஹாசன் விஜயகாந்த் பார்த்தீபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்களிலே இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது காதல் கோட்டை படம் தான். இவர் இயக்குனர் ராஜகுமாரனை கடந்த 2001 ம் ஆண்டு காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் அழகுக்காக மட்டுமல்ல நடிப்பு திறமைக்காவும் மக்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக உள்ளார்.
இந்த நிலையில் சமீப காலமாக அவர் பல யூடிப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் தன் கணவருக்கும் அவருக்குமான பல விடயங்களை கூறி உள்ளார்.

வைரல் பேட்டி
நடிகை தேவயானியின் தனியார் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் ராஜகுமாரன் பற்றி பேசி உள்ளார்.
அந்த பேட்டியில் அவரிடம், சூர்யவம்சம் படம் குறித்தும், அதில் மணிவண்ணனை ராஜகுமாரன் கலாய்க்கும் சீன் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அதற்கு அவர் 'சூர்யவம்சம் படமே எப்போதும் மறக்க முடியாடஹ் ஒரு எவர்க்ரீன் திரைப்படம். அதிலும் இந்த சீனும் மறக்க முடியாத சீன்.

அந்த சீனில் நடிக்க வேண்டியவர் அன்றைக்கு வரவில்லை. எனவே இவரே நடித்துவிட்டார். எப்போதுமே என்னால் அந்த சீனை மறக்க முடியாது' என்று தேவயானி கூறி உள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |