செல்போனை 100% சார்ஜ் செய்றீங்களா? செய்தால் என்னவாகும் தெரியுமா?
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை 100 சதவீதத்திற்கும் மேல் சார்ஜ் செய்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செல்போன்
இன்றைய காலத்தில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. பல நன்மைகள் இதில் காணப்பட்டாலும், சில தீமைகளும் இதில் இருக்கத்தான் செய்கின்றனர்.
பேசுவதற்கு மற்றும் தகவல் தொடர்புக்காக என்று இருந்த போன்கள் தற்போது ஒரு நபரின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
ஆம் பணப்பரிமாற்றம் தொடங்கி சாப்பாடு ஆர்டர் கொடுக்கும் நிலை என்று வளர்ந்து கொண்டே செல்கின்றது.
இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் அதிக நேரம் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி பெரும்பாலான நபர்களுக்கு எழுந்திருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடாதா?
பெரும்பாலான நபர்கள் போனை எப்பொழுதும் 100 சதவீத சார்ஜிங்கில் தான் வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அது மட்டுமின்றி சார்ஜ் போட்ட போனை 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின்பும் நீண்ட நேரம் அப்படியே வைத்து விடுகின்றனர்.
இவை பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அநேக பேருக்கு தெரியவில்லை.
ஓவர் சார்ஜிங் செய்வது பேட்டரியில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடுமாம்.
தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பேட்டரிகளை தனியாக வெளியே எடுக்கவோ மாற்றவோ முடியாது.
எனவே, செல்போனின் உயிர் போன்ற பேட்டரியை பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அடிக்கடி 100 சதவீதம் சார்ஜ் போடுவதால்தான் செல்போன் விரைவில் செயலிழப்பதால் 60 சதவீதம் அல்லது 80 சதவீதம் மட்டும் சார்ஜ் ஏற்றினால் போதுமானது.
எப்போதாவது ஒருமுறை வேண்டுமானால் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். எனவே, ஒரு செல்போனை வழக்கமாக 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் போட்டு, அதனைப் பயன்படுத்துவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |