இந்தியாவிலே பணக்கார சினிமா குடும்பம் இவர்கள் தான்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவிலேயே பணத்தில் மேலோங்கி நிங்கும் சினிமாக் குடும்பத்தின் விரிவான தகவலை இங்கு பார்க்கலாம். இவர்கள் இல்லாத துறையும் இல்லை இவர்களிடம் இல்லாத சொத்தும் இல்லை.
பணக்கார சினிமா குடும்பம் யார்?
சினிமாவை பொறுத்தவரை குடும்பத்தில் இருக்கும் ஒருவர் அத்துறைக்குள் சென்றுவிட்டால் அரசியலை போல அடுத்தடுத்து சந்ததியனரையும் அதனுள்ளே அழைத்து செல்வார்கள்.
இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. ஆனால் இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது.
அவர்கள் தான் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம். இது இந்தியாவின் மிக முக்கியமான சினிமா குடும்பமாக கருதப்படுகின்றது. தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் தான் அல்லு ராமலிங்கய்யா.
இவரின்4 பிள்ளைகளில், அரவிந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சிவீயை மணந்தார். இந்த திருமணத்தின் பின்னர் இந்த குடும்பத்தால் சினிமாவிற்கு பல நட்சத்திரங்கள் அறிமுகமானார்கள்.
உதாரணமாக ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு, வருண் தேஜ் சாய் தரம் தேஜ் மற்றும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்தனர். இந்த கூட்டு குடும்பத்தின் மொத்த கணக்கில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் பங்களிப்பு மிகப்பெரியது.
அந்த வகையில் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு பார்த்தால் சுமார் 6000 கோடிக்கு மேல் மதிப்புள்ளதாக காணப்படுகின்றது.
இதில், கீதா ஆர்ட்ஸ், அஞ்சனா புரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ், கொனிடேலா புரொக்டக்ஷன்ஸ் கம்பெனி உள்பட 5 திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அல்லு ஸ்டுடியோ ஆகியன உள்ளன. இது தவிர இந்த குடும்பத்தில் 4 பிரபல்ய நடிகர்களும் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |