தப்பித்தவறியும் மஞ்சளுடன் இந்தப் பொருளை கலந்துறாதீங்க..
மஞ்சள் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். சமையல் சோடாவை குக்கீஸ்கள், கேக்குகள், மஃபின்கள் போன்றவற்றை செய்வதற்கு பயன்படுத்துவோம்.
இரண்டையும் தனித்தனியாக உபயோகப்படுத்தும்போது மிகுந்த நன்மைகளை கொடுக்கவல்லது. ஆனால், இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது அது சிறந்ததாக இருக்காது.
அதற்கான காரணம் என்னவென்பதை பார்ப்போம்.
image - Fine Dinning Lovers
சமையல் சோடாவானது, ரெசிபிகளில் மாவை புளிக்க வைப்பதற்காகவும் இறைச்சிக்கான டெண்டரைசராகவும், காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்வதற்காகவும் பயன்படுகிறது.
இருப்பினும் இதன் அதிகப்படியான நுகர்வானது, வளர்சிதை, வயிற்று வலி, எலக்ரோலைட் சமநிலையின்மை, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரகப் பிரச்சினை போன்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
சரி மஞ்சளையும் சமையல் சோடாவையும் ஏன் ஒன்றாக சேர்க்கக் கூடாது என்பதற்கு சமையல் கலைஞர் ரன்வீர் பரார் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
image - Navbharat times
அதில், சமையல் சோடாவைக் கொண்ட ஒரு வடை தயாரிக்கும்போது அதில் மஞ்சள் சேர்க்கக் கூடாது. காரணம் என்னவென்றால், நாம் மாவை மஞ்சள் நிறமாக்க விரும்பினால், சமையல் சோடாவுடன் மஞ்சள் கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறிவிடும் என்பதனாலாகும். என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
அதாவது, சமையல் சோடாவை மஞ்சளுடன் கலக்கும்போது அதுவொரு இரசாயன எதிர்வினையை விளைவிக்கும். இதனால் குறிப்பிட்ட அந்த கலவை பழுப்பு நிறமாகி துர்நாற்றத்தை வெளியிடும்.
அதுமாத்திரமின்றி சமையல் சோடா சேர்க்கப்பட்ட மாவை நீண்ட நேரம் அப்படியே வைத்துவிடாமல், பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது உடனடியாக சமைக்கப்படாவிட்டால் அதன் செயல்திறனை இழந்துவிடும்.
image - Encyclopedia Brittanika