41 வருடத்துக்கு பிறகு ஏலம் போன ஒரு துண்டு கேக்! அப்படி என்ன ஸ்பெஷல்...விலை எவ்வளவு தெரியுமா?
பிரிட்டன் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா ஆகியோரின் திருமணத்தின் போது தயார் செய்யப்பட்ட கேக் ஒன்றின் ஒரு பகுதி தற்போது ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சார்லஸ் மற்றும் டயானா ஆகியோரின் திருமணம், கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் சுமார் 3,000 பேருக்கு அதிகமான விருந்தினர்களும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மொத்தம் 23 கேக்குகளா?
இந்த திருமணத்தில் விருந்தினராக நைஜல் ரிக்கட்ஸ் என்ற நபர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், சார்லஸ் - டயானா திருமணத்தின் போது மொத்தம் 23 கேக்குகள் தயார் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
இதில், ஐந்து அடுக்குகள் மற்றும் ஐந்து அடி கொண்ட கேக் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அந்த கேக்கின் ஒரு பகுதியை நைஜல் ரிக்கட்ஸ் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, கடந்த ஆண்டு நைஜல் ரிக்கட்ஸும் உயிரிழந்தார்.

அப்படி என்ன ஸ்பெஷல்
ஆனால், 41 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் - டயானா திருமணத்தின் போது தயார் செய்யப்பட்ட கேக்கின் ஒரு பகுதியை இத்தனை ஆண்டுகள் பாத்திரமாகவும் நைஜல் ரிக்கட்ஸ் வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த கேக் துண்டை இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனம் தற்போது ஏலத்தில் விட போவதாகவும் அறிவித்திருந்தது.
மேலும், இந்திய மதிப்பில் சுமார் 27,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில், இந்த கேக் துண்டு தற்போது இந்திய மதிப்பில் சுமார் 15,000 ரூபாய்க்கு தான் ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு இந்த கேக் துண்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.