சத்தான மீன் வடை...செய்து பார்க்கலாம் வாங்க
உடலுக்கு அதிகளவான சத்தை அள்ளி வழங்கக் கூடியது மீன். மீன் உண்பது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும்.
அந்த வகையில் மீன் குழம்பு, மீன் பொரியல் என்பவற்றையே நாம் செய்து சாப்பிட்டிருப்போம்.
இப்போது சற்று வித்தியாசமாக மீன் வடை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.

image - BetterButter
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

image - cookpad.com
செய்முறை
முதலாவதாக மீனை நன்றாகக் கழுவி, வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும்.
பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.
அதன்பின்னர் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக் கொள்ளவும்.
பின்னர் கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம் என்பவற்றை பொடியாக வெட்டவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, உதிர்த்த மீன், வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை,மிளகாய் தூள், கொத்தமல்லி, உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த மசாலா கலவையை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.
அருமையான மீன் வடை ரெடி.

image - Nish kitchen