வேகமாக எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
துரித உணவுகளால் சிலர் வேகமாக எடை போட்டு விடுகிறார்கள்.
இந்த ஆரோக்கியமற்ற எடையை குறைக்க வேண்டும் என தினமும் பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.
உடல் எடை இழப்பு என்பது பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை தேவைப்படும் ஒரு செயல்முறையாகும்.
மேலும் சிலர் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு கிடைக்கும் அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றுவார்கள்.
இதனால் காலப்போக்கில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில், உடல் எடை குறைப்பு விடயத்தில் நாம் விடும் தவறுகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
வேகமாக எடையை குறைத்தால் என்ன நடக்கும்?
Image - eatthis
1. டயட் என்ற பெயரில் அதிகமான செரிமானங்களுக்கு உள்ளாகும் உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது. இது பித்தைப்பையில் தேவையற்ற கற்களை உருவாக்கும்.
2. எடையை குறைக்க முயற்சிக்கும் பொழுது, சர்க்கரை மற்றும் கலோரிகளை திடீரென குறைப்போம். இதனால், ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்படும்.
3. வேகமாக எடையை குறைக்க முயற்சிக்கும் பொழுது, உடலிலுள்ள நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கிறது. இதனால் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டு உடம்பு சோர்வடையலாம்.
Image - medanta
4. குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்து கொள்வதால், வேகமாக எடை இழப்பு ஏற்படும். தசைகள் ஒரு வரமுறையில்லாமல் தொங்க ஆரம்பிக்கும்.
5. வளர்சிதைவில் அதிகளவிலான மாற்றம் ஏற்படுகின்றது. இதனால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |