அதிகமா நூடுல்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகள் வரக்கூடும் அது எந்தவிதமான பிரச்சனை என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
நூடுல்ஸ்
இன்றைய கால கட்டத்தில் நூடுல்ஸ் இன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. நூடுல்ஸ் போன்ற இன்ஸ்டன்ட் உணவுகள், மனித உடலுக்கு நாள்பட்ட தீங்கை ஏற்படுத்துகின்றன.
இவைகுறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும். இதில் சோடியச் சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், மினரல்கள் என ஒன்றும் இல்லை.
இந்த நூடுல்ஸை நாம் சாப்பிடும்போது அது ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த நூடுல்ஸ் பாமாயிலில் பொரித்து எடுக்கப்படும் அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்ததாக இருக்கும்.
இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால், இதய நோயை ஏற்படுத்தும். மேலும் அதிக கொழுப்பு அளவையும் உண்டாக்கி, உடல் எடையை உயர்த்தும். இதனால் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களில் மோனோசோடியம் குளுட்டாமேட்கள் உள்ளன.
இது சுவையை அதிகரிக்கும், சிலருக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எம்எஸ்ஜியின் அறிகுறிகள், தலைவலி, வியர்வை மற்றும் நெஞ்சு வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
உடலில் உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, அதிக கொழுப்புகள் மற்றும் அதிகளவிலான கெட்ட கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது. இந்த நூடுல்ஸ் சாப்பிடுவதனால் உடலில் ஒரு ஆராக்கியமும் கிடைக்கப்போவதில்லை.
இதை நாம் நமது உணவாக எடுத்துக்கொள்வதை தவிர்த்து எப்போதாவது ஒரு நாள் மட்டும் ஆசைக்காக உண்ணலாம். இப்படி செய்வதால் உடல் உபாதைகளை குறைக்க முடியும். உடலின் ஊட்டச்சத்துக்களும் பாதுகாக்கப்படும். நோய்கள் இன்றி வாழ முடியும்.