கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்?

world canada nature Barrow
By Nivetha Oct 12, 2021 12:50 AM GMT
Nivetha

Nivetha

Report

பொழுதுவிடிந்தால் வேலை, பொழுது சாய்ந்தால் தூக்கம் என்றிருக்கும் நமக்கு, சூரியன் மறையாத இடங்கள் இருக்கிறது என்றால் நம்ப முடியுமா?.

ஆனால், இந்த தகவல் உண்மை தான். உலகின் சில இடங்களில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியனின் அஸ்தமனமே இருக்காது.

படிப்பதற்கு வியப்பாக இருந்தாலும் பூமியின் விசித்திரங்களில் ஒன்று.

சுற்றுலா பிரியராக இருந்தால், சூரியனின் அஸ்தமனம் இல்லாத 6 இடங்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறையாவது அங்கு சென்று, அந்த சுவாரஸ்யத்தை அனுபவித்தை வாருங்கள்.

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்? | Travel 6 Places On Earth Where The Sun Never Sets

நார்வே

ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் இருக்கும். அந்த குறுப்பிட்ட நாட்கள் முழுவதும் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கும் அப்பகுதி, நார்வே 'லேண்ட் ஆப் மிட்நைட் சன்' (Land of the Midnight Sun) என்று அழைக்கப்படுகிறது.

இங்கு மே மாதம் துவக்கம் முதல் ஜூலை மாதம் இறுதி வரை சூரியன் மறைவதில்லை. இந்த காலத்தில் நீங்கள் நோர்வே சென்றால் வெறும் பகல் பொழுதை அனுபவிக்கலாம். நோர்வேயின் ஸ்வால்பார்டில் (Svalbard), ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கிறது.

நுனாவுட், கனடா

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே இரண்டு டிகிரிக்கு மேல் நுனாவுட் (Nunavut) என்ற இடம் அமைந்துள்ளது.

இந்த இடம் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு மேலாக முழு சூரிய வெளிச்சத்தில் மட்டுமே இருக்கும். வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகாமல், பகல் பொழுதாக நீடிக்கிறது. அதேசமயம், குளிர்காலத்தில் இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முழுமையாக இருளாக இருக்கிறது.  

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்? | Travel 6 Places On Earth Where The Sun Never Sets

ஐஸ்லாந்து

கிரேட் பிரிட்டனுக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய தீவு என்றால் அது ஐஸ்லாந்து. கொசுக்கள் இல்லாத அதிசய நாடாகவும் அறியப்படும் ஐஸ்லாந்தில், ஜூன் மாதத்தில் சூரியன் மறைவதில்லை. மிட்நைட் சன் என்று அழைக்கப்படும் நள்ளிரவு சூரியனின் அழகை ரசிக்க வேண்டும் என்றால், ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அக்குரேரி நகரம் மற்றும் கிரிம்சி தீவுக்குச் (Akureyri and Grimsey Island) செல்லலாம்.  

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்? | Travel 6 Places On Earth Where The Sun Never Sets

பாரோ, அலாஸ்கா

அலாஸ்காவில் உள்ள பாரோ (Barrow) இடத்திலும் சூரியனின் அஸ்தமனம் இருக்காது. மே மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஜூலை இறுதி வரை சூரியனின் அஸ்தமன் இருக்காது.

நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 முழு இருளாக அப்பகுதி இருக்கும். இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதியை துருவ இரவு நேரம் என அழைக்கப்படுகிறது.

பனி மூடிய மலைகள் மற்றும் மயக்கும் பனிப்பாறைகளுக்குப் புகழ்பெற்ற இந்த இடத்தை கோடை அல்லது குளிர்காலத்தில் பார்வையிடலாம்.  

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்? | Travel 6 Places On Earth Where The Sun Never Sets

பின்லாந்து

ஆயிரம் ஏரிகள் மற்றும் தீவுகளின் நிலம் என்று அழைக்கப்படும் பின்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் அஸ்தமனத்தை காண முடியாது.

கோடைக்காலத்தில் மட்டும் தொடர்ச்சியாக 73 நாட்களுக்குச் சூரியன் அஸ்தமனம் இல்லமால், முழு பகல் பொழுதாக இருக்கும்.

அதேசமயம், குளிர்காலத்தில் இந்த பகுதியில் சூரிய ஒளி இருக்காது. இங்கு வசிக்கும் மக்கள் தான் பூமியில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்களாகக் கருதப்படுகின்றனர். காரணம், தொடர்ச்சியான சூரிய பிரகாசத்தினால் இவர்கள் கோடையில் குறைவாக உறங்குகின்றனர். அதேநேரத்தில், குளிர்காலத்தில் நிகழும் நீண்ட இரவு நேரத்தின் காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் அதிகமாகத் தூங்குவதாகக் கூறப்படுகிறது.  

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்? | Travel 6 Places On Earth Where The Sun Never Sets

 ஸ்வீடன்

இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது ஸ்வீடன். இங்கு மே தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை இங்கு நள்ளிரவில் தான் சூரியன் மறையும். அதேபோல், மறைந்த சிறிது நேரத்தில், அதாவது அதிகாலை 4 மணியளவில் நாட்டில் மீண்டும் சூரியன் உதயமாகும். வருடத்தில் 6 மாதங்கள் வரை ஸ்வீடன் முழு சூரிய ஒளியின் கீழ் இருக்கும்.  

கனடாவின் வடமேற்குப் பகுதிகளில் நடக்கும் அதிசயம்... இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்? | Travel 6 Places On Earth Where The Sun Never Sets

8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US