புற்று நோயை அடியோடு அழிக்கும் பழம்... சதைப்பகுதியை கட்டாயம் சாப்பிடுங்க
ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண்டு. பழங்களைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது. எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய பழங்களில் சீதா பழம் முக்கியமான ஒன்றாகும்.
சீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது. விதையின் மேலே சதைப் பகுதி போர்த்தப்பட்டு இருக்கும் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டது இந்த சீதாப்பழம். இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இந்த பழம் புற்று நோயை தடுக்கும் தன்மை கொண்டது என்று அனைவருக்கும் தெரிவித்தவுடன் தான் இந்த பழத்தைப் பற்றிய நன்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
அசீடோஜெனின். அல்கலைடு போன்ற கூறுகளை இந்த பழம் கொண்டுள்ளது. இந்த கூறுகள் புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை குறைக்க சிறந்த முறையில் உதவுகின்றன.
சீதாப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதனால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பழத்தை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சீதாப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதனால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பழத்தை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
