காலையில் எழுந்தவுடன் இந்த 3 விஷயங்களை மறந்தும் பார்க்காதீங்க.. நாளே மோசமாகி விடுமாம்!
பொதுவாக காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
அன்றைய நாள் முழுவதும் நன்றாக கழிய வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் எப்போதும் நமக்கு தேவை.
வாஸ்து சாஸ்த்திரத்தின், காலையில் எழுந்தவுடன் சில தவறுகளை செய்வதால் அன்றைய நாளே பாதிப்பதாக கூறப்படுகின்றது.
அப்படியான தவறுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத தவறுகள்
1. வாஸ்து படி, காலையில் எழுந்தவுடன் உங்கள் நிழல் அல்லது மற்றவர்களின் நிழலை பார்க்கக் கூடாது. இது அசுபமான செயலாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் சூரிய தரிசனத்தின் போது மேற்குத் திசையில் நிழல் பார்க்கக் கூடாது. எனவே, தீய விளைவுகளை தவிர்க்க நிழல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
2. சமையலறையில் கிடக்கும் அழுக்கான பாத்திரங்களை இரவில் கழுவி விட்டு படுக்க வேண்டும். கழுவாமல் படுத்தால் அன்னபூரணி அருள், அன்னலட்சுமி அருள் கிடைக்காது என்பார்கள். அழுக்கான பாத்திரங்களை காலை எழுந்தவுடன் பார்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி இந்த பழக்கம் வறுமையை ஏற்படுத்தும்.
3. காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் முகத்தை பார்ப்பது நல்ல பழக்கம் என பலரும் கூறுவார்கள். இது தவறான பழக்கம் என வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது. கண்ணாடியில் இருக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளும் உங்களுக்குள் நுழையும். இதனால் நாள் முழுவதும் பிரச்சினைகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |