காக்கா கிட்ட வம்பு வச்சிக்காதிங்க! 20 வருடங்களுக்கு பகையை மறக்காதா? அதிரவைத்த ஆய்வு தகவல்
பொதுவாகவே நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் மிகவும் சாதாரணமாக கடந்து செல்லும் உயிரினங்களில் ஒன்று தான் காகம்.
காகத்தை பெரிதாக யாரும் பொருட்படுத்துவம் இல்லை, அதை பார்த்து பயப்படுவதும் இல்லை,ஆனால் நாம் நினைக்கும் அளவுக்கு காக்கைகள் சாதாரணமான பறவைகள் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் சமீபத்திய ஆய்வுகளில் காகங்கள் சுமார் 20 வருடங்கள் ஒரு விடயத்தில் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டவையாம்.
காகங்களின் ஆயுள் காலமே சுமாரட 10 தொடக்கம் 20 வருடங்கள் தான். அதாவது காகங்கள் தங்களைஅச்சுறுத்தும் விடயங்கள் குறித்த தகவல்களை அதன் சந்ததிக்கு கடத்தும் திறனை கொண்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.இது அறிவியலாளர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில், சமீபத்திய ஆய்வுகள், காகங்களின் மூளைத்திறன் குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.
காகங்கள் குறித்து நாம் அறியாத ஒரு பக்கம் தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காகங்களின் அசாதாரண அறிவாற்றல்
2012ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம், காகங்களின் அறிவாற்றல் திறன் ஐந்து தொடக்கம் ஏழு வயது சிறுவர்களின் மூளைக்கு இணையான அறிவாற்றலை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
காகங்களுக்கு இயற்கையிலேயே பொருட்களை தங்களின் தேவைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தும் அறிவு காணப்படுகின்றது.
குடத்தின் அடியில் இருந்த தண்ணீரை கற்களை போட்டு உயர்த்தி நீர் அருந்திய காகத்தின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இது வெறும் கற்பனை அல்ல காகங்கள் அதனை நிஜத்தில் செய்ததாக சான்றுகள் இருக்கின்றன. மேலும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பது, காரணங்களை ஆராய்வது, மற்றும் எதிர்காலத்தை முன்னறிந்து திட்டமிடுவது போன்ற திறன்களை காகங்கள் கொண்டுள்ளன.
அவற்றின் இந்த அசாதாரணமான அறிவு, கூட்டாக வாழும் சூழலில் அவற்றை மேலும் சக்திவாய்ந்தவையாக மாற்றுகிறது.
நினைவாற்றல்
காகங்களின் மிக வியப்பான திறன், மனிதர்களின் முகங்களை அவற்றின் நினைவில் ஆழமாகப் பதிவு செய்து வைப்பதுதான்.
தங்களுக்கு ஏதாவது தீங்கு செய்த ஒரு மனிதனின் முகத்தை, ஒருமுறை பார்த்தாலும் கூட, அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் காகங்களுக்கு உண்டு.
மேலும், அந்த முகத்தைப் பற்றிய தகவல்களை, தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற காகங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் கூட கடத்தும் திறனை காகங்கள் கொண்டுள்ளமதாக ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.
அதன் இந்த அறிவாற்றல் காரணமாக ஒரு தனிப்பட்ட காகம் பெற்ற அனுபவம், அதன் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பிற்கு துணைப்புரியும்.
காகங்களின் இந்த அசாதாரண நடத்தையை உறுதிப்படுத்த, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதன் போது ஆராய்ச்சியாளர்கள் ஒரே மாதிரியான முகமூடிகளை அணிந்து, சில காகங்களை பிடித்து அடைத்து வைத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு அந்த காகங்கள் விடுவிக்கப்பட்டபோது, அவை தாங்கள் பிடிபட்ட இடத்தை விட்டு வெகுதூரம் பறந்து சென்றபோதும், முகமூடி அணிந்த மனிதர்களைக் கண்டதும், உடனடியாக அவர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டுள்ளது மேலும் சில காகங்கள் அவர்களை தாக்கவும் முயற்சி செய்துள்ளன.
அந்தவகையில், காகங்கள் வெறும் முகத்தை மட்டும் அடையாளம் காணவில்லை; தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணத்தை நினைவில் வைத்துக் கொண்டு, அந்த நபரை எவ்வளவு காலம் கழித்தும் பதிலுக்குத் தாக்க முடியும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |