அட இது தெரியாம போச்சே! நாம் தினசரி பாவிக்கும் இந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்கா?
பொதுவாகவே நாம் அனைவரும் உணவுப்பொருட்களை வாங்கும் போதும் அழகு சாதன பொருட்களை வாங்கும் போதும் மாத்திரதே காலாவதி திகதி பற்றி அதிக கவனம் செலுத்துகின்றோம். சிலர் அதிலும் கவனம் செலுத்துவது கிடையாது.
ஆனால் நாம் பாவிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் காலாவதி திகதி இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு நாம் காலாவதி திகதிகளை பார்ப்பதில்லை.இன்னும் சொல்லப்போனால் அதற்கு காலாவதி திகதி இருக்கிறதா என்பது பற்றி கூட பலரும் அறிந்திருப்பதில்லை.
அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுள் நாம் பார்க்க தவறும் எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் காலாவதி திகதி இருக்க்கின்றது என்பது குறித்தும் அவை என்னென்ன எவ்வளவு காலத்தில் காலாவதி ஆகும் என்பது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலணிகள்
நாம் பயன்படுத்தும் காலணிகள் 6 மாதத்தில் காலாவதியாகும். அதனை கவனிக்காமல் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் சரியான பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
குளிக்கும் நார்
நாம் அனைவரும் அன்றாடம் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தும் பஞ்சு நார்களுக்கும் 6 மாதம்தான். அதன் பின்னர் அவை காலாவதியாகிவிடும். இதனை ஆறு மாதத்துக்கு மேலும் தொடர்ச்து பயன்படுத்துவதால் சரும நோய்களுக்கான அபாயம் அதிகரிக்கின்றது. இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துவாய்கள்
தினமும் குளித்துவிட்டு, முகம் கழுவிவிட்டு துடைக்கப் பயன்படுத்தப்படும் துவாய்களுக்கு 1-3 வருடங்கள்தான் காலாவதி நாள். எவ்வளலு சுத்தமாக வைத்திருந்தாலும் அதன் பின்னர் அது பலனளிக்காது. நிச்சயம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது துவாய்களை மாற்ற வேண்டியது அவசியம். இல்லாவிடில் சரும பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
பற்தூரிகை
நாம் தினசரி பல் துலக்கப் பயன்படுத்தப்படும் பிரஷுகளை 3 மாதங்கள்தான் பயன்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவை காலாவதியாகிவிடும்.
ரன்னிங் ஷூ
ஜிம், ஜாகிங், ரன்னிங் போன்ற ஷூக்களை அதிகபட்சமாக ஒரு வருடம்தான் பயன்படுத்த வேண்டும். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது.
சோப்பு தண்ணீர்
அன்றாடம் பாத்ரூம் டைல்ஸ், கிட்சன் டைல்ஸ், கண்ணாடி, டிவி என துடைக்கப் பயன்படும் சோப்பு தண்ணீரையும் 3 மாதங்கள் மேல் பயன்படுத்தக்கூடாது. அதன் பின்னர் அவை காலாவதியாவதால் அதன் வாசனை மற்றும் ஆற்றலை இழந்துவிடுகின்றது. இதன் பின்னர் அவற்றை பயன்படுத்துவதால் கிருமிகளை அழிக்க முடியாது.
மசாலா வகைகள்
வீட்டில் சமையலுக்கு பயன்னடுத்தும் மிளகு, சீரக, பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலா பொருட்களுக்கு 1-3 வருடங்கள்தான் காலாவதி திகதி. அதன் பிறகு அதன் ஃபிளேவர் மாறிவிடும். அதனை சமையலுக்கு பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
ரப்பர்
குழந்தைகளின் பால் புட்டி அல்லது வாயில் உறிஞ்ச பயன்படும் ரப்பர்களை 2 தொடக்கம் 3 வாரங்கள்தான் பயன்படுத்த வேண்டு்ம். அதன் பின்னர் அவற்றில் கிருமிகள் தேங்க ஆரம்பித்துவிடும். அதனால் குழந்தையின் உடல் நலம் பாதிப்படைய வாய்பு காணப்படுகின்றது. இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |