பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ்... கெத்து காட்டும் திமுக! எங்கு தெரியுமா?
தேனி மாவட்டத்தில் கடந்த முறை அதிமுக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை ஆண்டிபட்டியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது, போடியில் ஓ பன்னீர்செல்வம் 2வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஆண்டிபட்டி தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் 4900 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் மகாராஜன் 3485 வாக்குகள் பெற்று 2வது இடம் வகிக்கிறார்.
முதல் சுற்றில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் 2520 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுகவின் தங்கதமிழ்செல்வன் 2157 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே 2வது சுற்றில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தங்கம் ஓபிஎஸ்ஐவிட 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.
கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3099 வாக்குகள் பெற்று முன்னியில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சையது கான் 2212 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
பெரியகுளம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் 3786 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் முருகன் 2534 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். தற்போதைக்கு முதல்சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது.
அடுத்தடுத்த சுற்று முடிவுகள் வெளியாகும் போது முன்னிலை நிலவரங்கள் மாறக்கூடும்.