பூஜாவுக்கு பாட்டு போட்டு விருதை தட்டிச் சென்ற டிஜே பிளாக்! கொந்தளிக்கும் விஜய் டிவி ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் போட்டியாளர் பூஜாவையும் டிஜே பிளாக்கையும் பப்ளிட்டிக்காக பயன்படுத்தும் குறித்த தொலைக்காட்சி தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்த வருகின்றது.
சூப்பர் சிங்கர்
தற்போது இந்தியாவை பொருத்தமட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படையில் பார்த்தால் பல சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்த சேனல்களை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு விஜய் டிவி தான் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
இதில் செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் பட்டிதொட்டியெங்கும் இருக்கும் மக்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆரம்பமாகி தற்போது சீசன் 9 சென்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கே பல கோடி ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில் தற்போது மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் 9 ல் அடிக்கடி டிஜே பிளாக் மற்றும் பூஜா இருவரின் பெயர்களும் ஒலித்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இது அவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன் தொகுப்பாளர்கள் இவர்கள் இருவரை வைத்து என்கரேஜ் பண்ற மாதிரி லூட்டி அடித்து வருகின்றார்கள்.
இது மட்டுமல்லாது இவர்களை ஆதரவளிக்கும் வகையில் டிஜே பிளாக்கிற்கு விஜய் டெலிவிஷன் அவார்டில் “தூள் மூமண்ட்” என்ற விருதை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன், இதனை பார்த்த இணையவாசிகள்,“ குறிப்பிட்ட ஒரு நபரை இப்படி சர்ச்சையாக எழுப்புவது அழகில்லை.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.