Ethirneechal: மாலையும் கழுத்துமாக அசிங்கப்பட்ட குணசேகரன்... நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கடைசி நேரத்தில் திருமணத்திற்கு சம்மதிக்காமல் எழுந்துள்ள நிலையில், மாலையும் கழுத்துமாக குணசேகரன் அமர்ந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்த நிலையில், குணசேகரன் தான் நினைப்பதை தம்பிகள் மூலமாக சாதித்து வருகின்றார்.
இந்நிலையில் குணசேகரனுக்கு மணிவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஈஸ்வரியும் எதிர்த்து நிற்காமல் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதற்கான மாலையும் கழுத்துமாக குணசேகரன் அமர்ந்திருக்க, ஈஸ்வரி அவர் பக்கத்தில் அமர்வதற்கு சம்மதிக்காமல் நின்றுள்ளார். இதனால் வீடே கலபரமாக மாறியுள்ளதுடன், அடுத்த நடப்பது என்ன என்ற கேள்வியும் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
