மழுங்கி போன கத்தியை ஷார்ப்பாக மாற்றனுமா? வெறும் 2 நிமிடம் போதும்
சமையலுக்கு காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தி மழுங்கி போயிருந்தால் அதனை வெறும் இரண்டு நிமிடத்தில் ஷார்ப்பாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மழுங்கிய கத்தி
உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தி அல்லது வேறு எந்தக் கத்திரிக்கோலும் மழுங்கிப் போய்விட்டால் அதனை தூக்கிப் போடுவதற்கு பலருக்கும் மனம் வருவதில்லை.
இனி அவ்வாறு தூக்கு போடுவதற்கு யோசிக்க வேண்டாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையினை செய்தால் மட்டுமே போதும்.
முதலில், மழுங்கிய முனையை இரண்டு விநாடிகள் கவனமாக நெருப்பில் காட்டுங்கள். பிறகு, உங்கள் வீட்டில் உள்ள ஒரு செராமிக் டீ கப் ஒன்றினை தலைகீழாக மேஜை மீது வைக்கவும்.
அதன் அடிப்பக்கம் சொரசொரப்பாக இருக்கும் இடத்தில், நெருப்பில் காட்டிய கத்தி, அல்லது கத்தரிகோலையோ வைத்து தேய்க்க வேண்டும்.
இவ்வாறு சில முறை தேய்த்ததும், ஆச்சரியப்படும் விதமாக உங்கள் கத்தி அல்லது கத்திரிக்கோல் மீண்டும் கூர்மையாக மாறியிருப்பதை நீங்கள் உணரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |