ரெடின் கிங்ஸ்லி மீது காதல் வந்தது எப்படி?.. மனம் திறந்த நடிகை சங்கீதா
நடிகர் ரெடின் கிங்ஸ்லி நெல்சன் மீது காதல் ஏற்பட்டது எப்படி என்பதை அவரது காதல் மனைவியும், சீரியல் நடிகையுமான சங்கீதா கூறியுள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி நெல்சன்
குழுவில் நடமாடிக் கொண்டிருந்த கிங்ஸ்லி குறுகிய காலத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகின்றார்.
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற ரெடின் கிங்ஸ்லி, தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், பின்பு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் சென்னைக்கு வந்துள்ளார்.
46 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்த இவர் கடந்த 2023ம் ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால் இவர்களின் திருமணத்தைக் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், சங்கீதா கிங்ஸ்லியுடனான காதலைக் குறித்து பேசியுள்ளார்.
காதல் ஏற்பட்டது எப்படி?
தனது அப்பா இறந்த போது தான் ரெடின் மீது காதல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதாவது அப்பா இறந்த போது அவர் ஊரில் இல்லை என்பதால் இறுதி சடங்கிற்கு வரமுடியாமல் போயுள்ளது.
பின்பு மூன்று நாள் கழித்து வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறியுள்ளார். அத்தருணத்தில் வீட்டில் அனைவரும் மிகவும் சோகத்தில் இருந்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி வீட்டிற்கு வந்த 5 நிமிடத்தில் அனைவரையும் கலகலப்பாக மாற்றினாராம்.
அத்தருணத்தில் அனைவரும் கவலையை மறந்து போயுள்ளனர். அந்த நேரம் தான் நடிகை சங்கீதாவிற்கு கிங்ஸ்லி மீது காதல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் சங்கீதாவின் அப்பாவும், கிங்ஸ்லி போன்று எப்பொழுதும் கலகலப்பாகவும், பாசிட்டிவாகவும் இருப்பாராம்.
அப்பாவைப் போன்று வீட்டையே கலகலப்பாக மாற்றிய அந்த நேரத்தில் தான் இவர் வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் தோன்றியதாகவும், அது தான் அவர் மீது தனக்கு காதல் வந்த தருணம் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |