Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் செய்த செயல்: மொத்தமாக உடைந்த உண்மை
Kpy பாலாவை தனியாக அழைத்து ரம்பா கணவர் பணம் கொடுத்து செய்ய சொன்ன விடயம் குறித்து கலா மாஸ்டர் மேடையில் பேசியுள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.
இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "Jodi are you ready" என்ற நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராக கம்பேக் கொடுத்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரம்பாவை பார்ப்பதால் அந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
Kpy பாலாவுக்கு செய்த உதவி
மேலும், ரம்பா கணவருடன் இணைந்து சினிமா மற்றும் மீடியாத்துறையில் சாதிக்க நினைக்கும் பலருக்கு உதவிச் செய்து வருகிறார்கள். பிரபலங்கள் பலருக்கும் உதவிச் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், Kpy பாலா செய்யும் உதவிகளை கேட்டு தெரிந்து கொண்ட ரம்பா கணவர், அவரை அழைத்து சுமாராக மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து,“ இது வேறு யாருக்கும் இல்லை. உனக்காக நாங்கள் தருகிறோம். இந்த பணத்தை வெளியில் எங்கும் செலவு செய்யக் கூடாது..” என்றும் கூறியுள்ளார்.
இதனை கலா மாஸ்டர் மேடையொன்றில் பேசும் பொழுது Kpy பாலாவுக்கு முன்பே கூறியுள்ளார். அதற்கு Kpy பாலாவும், “ ஆமாம், அந்த பணத்தை அப்படியே வைத்திருக்கிறேன்..“ எனக் கூறுகிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |