வீட்டில் உள்ள ரோஜா செடி பூத்து குலுங்கணுமா? உரத்தில் இதை சேருங்க போதும்
ஒரே செடியில் கொத்து கணக்கில் ரோஜா பூக்கள் பூக்க ஆசைசயாக இருந்தால் இப்பதிவை படித்ததன் பின்னர் நீங்களும் அதை சாதிக்கலாம்.
ரோஜா செடி
ரோஜா பூக்கள் தோட்டத்தின் சாம்ராஜ்யம் எனலாம். அதன் நறுமணமும் அழகும் எந்த ஓரத்தையும் சிறப்பாக்கும். ஆனால், குறிப்பாக மழைக்காலத்தில், ரோஜா செடிகள் வாடத் தொடங்குவது வழக்கமான பிரச்சினையாகும்.
மழைக்கால பிரச்சனைகள் மழைக்காலத்தில் மண்ணில் அதிக ஈரப்பதம் உருவாகிறது. இது: வேர்கள் அழுக ஏற்படுத்தும் பூஞ்சை தொற்று உண்டாக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்தும் இதனால், ரோஜா செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பூப்பதை நிறுத்திவிடும்.
வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம்
முதலில் ஒரு பழுத்த வாழைப்பழம் 2 தேக்கரண்டி மர சாம்பல் சிறிதளவு பொடி வெல்லம் தேவையான அளவு மோர் அல்லது தயிர் 1 லிட்டர் தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கரைசலாக தயாரிக்கவும். மூடிய பாத்திரத்தில் 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, வாரத்தில் ஒரு முறை இந்த கரைசலை செடியின் வேர்களுக்கு அருகில் ஊற்றலாம்.
இதன் நன்மைகள்: பொட்டாசியம், கால்சியம், நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துகள் கிடைக்கும் செடி வலுவாக வளர்ந்து அதிகமாக பூக்கும்.
உரம் இடும் பொழுது கவனிக்கவேண்டியவை
மண் மிகவும் ஈரமாக இருக்கக்கூடாது
காலை அல்லது மாலை நேரம் உரமிட வேண்டும்
உரம் இலைகளில் விழாமல், வேருக்கு அருகில் மட்டும் போட வேண்டும்
பானையின் வடிகால் சீராக இருக்க வேண்டும்
மழை ஆரம்பிக்கும் முன் ரோஜா செடிகளை நன்கு கத்தரிக்கவும். இது புதிய கிளைகள் வளரச் செய்வதுடன், பூக்கும் விகிதத்தையும் அதிகரிக்கும்.
மழை ஆரம்பிக்கும் முன் ரோஜா செடிகளை நன்கு கத்தரிக்கவும். இது புதிய கிளைகள் வளரச் செய்வதுடன், பூக்கும் விகிதத்தையும் அதிகரிக்கும்.
ரோஜா செடிக்கு தினமும் குறைந்தது 4-5 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்க வேண்டும். தொட்டியை அவ்வாறு வைக்க வேண்டும். அதோடு, பழைய பூக்கள், உலர்ந்த இலைகளை அகற்றுவது வளர்ச்சிக்கு உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |