எனக்கும் நாக சைதன்யா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை
எனக்கும் நாக சைதன்யா மீது ஒரு ஈர்ப்பு இருந்து என நடிகை திவ்யன்ஷா கவுசிக் வெளிப்படையாக கூறி ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருமண வாழ்க்கை முறிவு
தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்து முன்னணியிலிருக்கும் நடிகர் தான் நாக சைதன்யா. இவரின் யதார்த்தமான நடிப்பால் தெலுங்கு மட்டுமல்ல தமிழிலும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் முன்னணி நடிகையாக இருந்த சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வாக்குவாதங்கள் காரணமாக தற்போது இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் சிறிதுக் காலம் விலகியிருந்த நடிகை சமந்தா. விவாகரத்திற்கு பின்னர் அதிக கவர்ச்சியில் பல படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நாக சைதன்யாவும் திருமண வாழ்க்கையை மறந்து பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு துணையாக நடிகை கீர்த்த ரெட்டி நடித்துள்ளார்.
கிசு கிசுப்புக்கு முற்றுப்புள்ளி நடிகை
இந்த நிலையில் இவர் சமந்தாவை விட்டு பிரிந்து இருப்பதால் இவர் யாருடன் வெளியில் அல்லது நட்பு ரீதியாக வெளியில் சென்றாலும் பல கிசு கிசுக்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
உதாரணமாக சமிபக்காலமாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த இளம் ஹீரோயினும் தெலுங்கு நடிகையுமான ஷோபிதா துலிபாலாவுடன் லிவிங் டு கேதரில் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாகவும் வதந்திகள் கிளம்பின.
இது போன்று சமீபத்தில் மஜிலி படத்தின் நடிகை திவ்யன்ஷா கவுசிக்வுடனும் இவர் கிசு கிசுக்கபட்டார். இதனை தெரிந்து கொண்ட நடிகை திவ்யன்ஷா, “ எனக்கு நாக சைதன்யாவை மிகவும் பிடிக்கும்.அவர் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஆனால் இது நட்பு ரீதியிலான பழக்கம் மட்டும் தான்.
அவருடன் நான் நெருக்கமாக இருக்கவும் தான் கிசுகிசுக்கிறீர்கள். ஆனால் இது போன்று எந்த பழக்கமும் இல்லை.” என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள்“ ஈர்ப்பை மாற்றி இப்படியும் கூறலாமா ” என கருத்து வெளியிட்டுள்ளார்கள்.