அர்னவால் கைவிடப்பட்ட குழந்தை... பதிலடி கொடுக்கும் வகையில் கோலாகலமாக விழா நடத்திய திவ்யா
அர்னவ்-திவ்யா விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரிதாக வெடித்து சென்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது இணையத்தில் திவ்யா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
அர்னவ்-திவ்யா
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
பிறகு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணம் முடித்து கொஞ்சநாளில் இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் எதையும் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்த திவ்யா பல குற்றச்சாட்டுக்களை வைத்ததால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் அர்னவ். பின்னர் கர்ப்பமாக இருந்த திவ்யா அண்மையில் பெண் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார்.
திவ்யாவின் வைரல் பதிவு
இந்நிலையில், பல பிரச்சினைகளுக்கு மத்தியில் குழந்தைப் பெற்றுக் கொண்ட திவ்யா ஸ்ரீதர். அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்.
இந்த விழாவிற்கு சீரியல் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர். இந்தப்புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |