எனது திரைப்படங்களில் அந்த மாதிரியான காட்சிகள் வைக்கமாட்டேன்! விக்னேஷ்சிவன்
நான் எடுக்கும் திரைப்படங்களில் அந்த மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டேன் என விக்னேஷ்சிவன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக “போடா போடி" திரைப்படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ்சிவன் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள், காத்து வாக்குள 2 காதல் ஆகிய படங்ளை இயக்கியுள்ளார்.
இவர் தனது இரண்டாவது படத்திலே சினிமாவில் டாஃப் கதாநாயகியாக இருக்கும் நயனை வைத்து திரைப்படம் எடுத்தார்.
இந்த திரைப்படத்திலிருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்து தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
தற்போது நயனை வைத்து கனேக்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
மது அருந்தும் காட்சிகள்
இந்நிலையில் இவர் எடுக்கும் திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகளை வைக்க மாட்டேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இவர் எடுக்கும் காதல் படங்களிலும் இது போன்ற காட்சிகள் இருக்காது என உறுதியாக கூறியிருக்கிறார்.
இது குறித்து பல சென்சார் போர்டு அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.