மனைவி நயனை கட்டியணைத்தபடி விக்னேஷ்! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
நயன் மற்றும் விக்கியின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நயன்தாரா விக்கி தம்பதிகள்
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜுன் மாதம் தனது காதலர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து இருவரும் வெளிநாடுகளில் தங்களது நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள்.
இந்த குழந்தை விவாகரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இருவருக்கம், 2016ம் ஆண்டில் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், அரசு விதிமுறைகளை மீறி இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட விக்கி
இந்நிலையில் நயன்தாராவின் 38வது பிறந்தநாளை வரும் 18ம் தேதி கொண்டாட இருக்கின்றார். தற்போது குழந்தைகளை கவனித்து அவர்களுடன் இருந்து வரும் நயன்தாரா, இந்த பிறந்தநாளை தனது வீட்டிலேயே கொண்டாட உள்ளாராம்.
அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் விக்னேஷ் நீண்ட நாட்கள் கழித்து தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு்ள்ளார். தனது நண்பர்களுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இறுக்கமாக கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளனர்.