பழைய ஆள் என சந்திக்க மறுத்தார்... வேதனையில் அழுத வையாபுரி - வெளியான பரபரப்பு வீடியோ!
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வையாபுரி. விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய வையாபுரி, தனது திரையுலக அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

வைரலாகும் காணொளி
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இணைந்த குறுகிய காலத்திலேயே ஒரு லட்சம் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனக்கு நேர்ந்த மனவேதனையான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு புரொடக்ஷன் மேனேஜர் அழைத்ததால் இயக்குநர் ஒருவரை சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் “அவர் பழைய ஆள், இப்போது இன்ஸ்டாகிராமில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள்” எனக் கூறி அந்த இயக்குநர் தன்னை சந்திக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இன்றைய சூழலில் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், “நானும் இருக்கிறேன்” என்பதை நினைவூட்டவும் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகவும் வையாபுரி தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லட்சம் பேர் தன்னை பின்தொடர்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |