சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!
சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா என்ற பேச்சு சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்களும் கவலையில் இருந்தனர். இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு த்ரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் த்ரிஷா, தனது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா? ஏன் தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை? என எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும், தனது புதிய பட அறிவிப்பின் மூலம் த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
இது வெறும் பட அறிவிப்பு மட்டுமல்ல. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'பனோரமா ஸ்டுடியோஸ்' ('த்ரிஷ்யம்' பட நிறுவனம்) இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது.

இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் திறமையான நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
மூன்று திறமையான நடிகைகள் ஒரே படத்தில் இணைந்திருப்பது, படத்தில் தரமான கன்டென்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சென்றது ஏன்?
அக்ஷய் குமார் நடித்த 'ஏர்லிஃப்ட்', சைஃப் அலி கான் நடித்த 'செஃப்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன், இந்தப் படத்திற்கும் ஆக்ஷன்-கட் சொல்லவுள்ளார். இது அவரது முதல் தமிழ் திரைப்படம் மட்டுமின்றி, முதல் சைக்கலாஜிக்கல் ஹாரர் படமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் நகரில் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதற்காகத்தான் த்ரிஷா லண்டனில் தங்கியுள்ளார்.
மர்மம், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் உருவாகும் இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் த்ரிஷா நடித்த 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய ப்ராஜெக்ட்டையும் அறிவித்துள்ளனர். ஒருபுறம் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்துள்ள 'விஸ்வம்பரா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், லண்டனில் தனது புதிய ஹாரர் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பிலும் த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார். 'த்ரிஷ்யம்' போன்ற வெற்றிகரமான படங்களை வழங்கிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.

இதன் மூலம் த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற வதந்திக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் லண்டனில் விஜய்யின் மனைவி சங்கீதாவை சந்திக்கவே த்ரிஷா சென்றதாக எழுந்த வதந்திகளுக்கு, தனது புதிய பட அறிவிப்பின் மூலம் அவர் பதிலளித்துள்ளதாக தெரிகிறது.