விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய்.
இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.

இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.
அரசியலில் விஜய் ரேஸ் களத்தில் அஜித்...
நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.
மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி!
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் அஜித் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்துக்கு, தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் சிட்டி உருவாகும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திரையில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று சினிமாவைத் தாண்டி தங்களது தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான திட்டத்திற்காக அஜித், விஜய்க்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருப்பது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 @CMOTamilnadu @Akracingoffl @SureshChandraa #AjithKumar #JosephVijay #TamilNadu #TamilNaduCM #AKRacing #AjithKumarRacing pic.twitter.com/yWTn3F8RtN
— Suresh Chandra (@SureshChandraa) September 3, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |