பிரபல தமிழ்பட இயக்குனர் அதிரடி கைது! காரணம் என்ன?
திரைப்பட இயக்குனரான கெளதமன் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே குறிஞ்சாங்குளம் காந்தாரி அம்மன் வழிபாட்டுக்காக 4 உயிரிழந்தார்கள்.
அவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்ய கெளதமன் தூத்துக்குடி வந்துள்ளார்.
இதனிடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இறங்கிய உடன் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர் .
கைதுக்கான காரணம்
மேலும் கைதுசெய்து வாகனத்தில் கூட்டிச் சென்றனர். மேலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஏழு நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மாவட்ட கோட்டாட்சி தலைவர் பழனி குமார் கூறியுள்ளார்.
இவர் அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் இயக்குனர் கௌதமன் அத்துமீறி உள்ளே வந்துள்ளார்.
அதனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்த 13 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.