பாரதிராஜாவின் இறுதிசடங்கில் சண்டை ஏன்? சொத்துக்கள் விபரம் இதோ
இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிசடங்கின் போது அவர் மகள் ஜனனி மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாரதிராஜா
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் சமீபத்தில் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கிராமத்து கதையை மையமாக கொண்டு பல திரைப்படங்களை இயக்கியதுடன், பல கதாநாயகிகளையும் அறிமுகம் செய்தார்.
1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனையுடன் கொண்டு வந்தவர் ஆவார்.
சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர் சமீபத்தில் காலமான நிலையில், அவரது சொத்துக்காக சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு அவரது தம்பி ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சொத்துக்களால் சண்டையா?
தேனியில் நடைபெற்ற பாரதி ராஜாவின் இறுதி சடங்கின் போது அவரது மகள் ஜனனி, அண்ணன் மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
அப்பொழுது ராதிகா இடையே சென்று கையெடுத்து கும்பிட்டு ஜனனியை சமாதானப்படுத்தினார். இந்த சண்டை சொத்துக்காக நடைபெற்றதாக கூறப்பட்டது.
ஆனால் தம்பி ஜெயராஜ் அளித்துள்ள விளக்கத்தில் சொத்துக்காக நடைபெற்ற பிரச்சனை கிடையாது. அண்ணன் உயிரோடு இருக்கும் போதே சொத்தை பிரித்து எழுதி கொடுத்துவிட்டார்.

மகள், மனைவி, மருமகள் என மூன்று பங்காக பிரித்து தெரிவாகவும் எழுதி கொடுத்துள்ளார். இறுதிசடங்கின் போது நாத்தனாரின் பெற்றோர் வர தாமதமான நிலையில், அதனைக் கேட்டே சிறிய வாக்குவாதம் எழுந்தது. இதனை சொத்து பிரச்சனை என தவறாக கூறிவிட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.