சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்த தகவல் அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இவர் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, முன்னணி இயக்குநராக வலம் வந்தவர்.
இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார்.

கனா கண்டேன் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அதன் பின்னர் அயன், கோ, கவன், காப்பான், மாற்றான், அநேகன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.