நேரடியாக விழும் குரு பார்வை - காத்திருக்கும் கோடி நன்மை எந்த ராசிகளுக்கு ஜாக்பட்?
ஜோதிடத்தில் ‘கஜகேசரி யோகம்’ ஒரு சக்திவாய்ந்த ராஜயோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் வந்துவிட்டால் ஒரு ராசியின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உண்டாகும்.

கஜகேசரி ராஜயோகம்
ஜோதிடத்தில் அனைத்து ராசிகளுககு கிரகப்பெயர்ச்சிகள் முக்கிதுவம் கொடக்கின்றன. குரு பகவான் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார்.
இந்த நிலையில் மே 18, 2026 அன்று சந்திரன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுன ராசியில் ஏற்கனவே தேவகுருவான வியாழன் இருக்கிறார்.
இதில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகும்.
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட ராசிகள் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
- கஜகேசரி யோகம் மிதுன ராசியில்தான் உருவாகிறது. எனவே உங்கள் ராசிக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடந்த வேலைகள் முடியும். உங்கள் நிதிநிலை மேம்படும். புதிய வருமான வழிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்தும். முக்கிய தேவைகள் நிறைவேறும். அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் பணியால் மகிழ்ச்சியடைவார்கள். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பொருளதாராத்தில் தன்னிறைவு உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடியும். வேலையில் வெற்றியும், மரியாதையும் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் லாபத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிவரும். வேலையில் புதிய பொறுப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் திடீர் பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உருவாகும். பழைய சண்டைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியமும் முன்பை விட சிறப்பாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).