சப்ஜா விதை - சியா விதை இரண்டும் வேறுபட்டதா? இதை வைத்து கண்டுபிடிங்க...
சியா விதைகள், சப்ஜா விதைகள் என்றால் என்ன? இரண்டும் ஒன்றா? அல்லது வேறு வேறா? இந்தக் குழப்பம் அனைவருக்கும் உள்ளது. உண்மையில் இது இரண்டும் ஒன்றல்ல.
வேறு வேறு. டயட்டை கடைபிடிப்பவர்கள் இதனை சூப்பர் ஃபுட்ஸ் என்று கூறுகிறார்கள்.
சரி இனி இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி பார்ப்போம்...
சப்ஜா விதைகள்
திருநீற்றுப் பச்சிலையின் விதைகள்தான் சப்ஜா விதைகள். இதை ஆங்கிலத்தில் பேசில் சீட்ஸ் என்று அழைப்பர். சப்ஜா விதைகள் கறுப்பு நிறத்தில் மாத்திரமே காணப்படும்.
இதனை தண்ணீரில் ஊறவைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். உடல் குளிர்ச்சிக்கு உதவும். இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. உடல் சூட்டினால் ஏற்படும் கடுகடுப்பை நீக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும்.
image - newyork times
சியா விதைகள்
இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. இது சப்ஜா விதைகளை விட சிறியதாக இருக்கும். வெள்ளை, சாம்பல், கறுப்பு என்ற மூன்று நிறத்திலும் காணப்படும். சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்தும் குடிக்கலாம்...அப்படியேவும் சாப்பிடலாம். உடலுக்கு வலிமை சேர்க்கும்.
இதில் அதிகளவான புரதச்சத்து, நார்ச்சத்து, ஒமேகா - 3 போன்றவை இருக்கின்றன. இதனால் செரிமானப் பிரச்சினைக்கு மிகவும் உதவும். உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலிலுள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது. சப்பாத்தி செய்யும்போது அவற்றை வறுத்துப் பொடியாக்கி சேர்த்தும் சுடலாம்.
image - wellcurve
இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்தால், சியா விதைகளை விட சப்ஜா விதைகள் அளவில் பெரிதாகும். ஃபளூடா, நன்னாரி சர்பத்தில் எல்லாம் உபயோகிப்பது சப்ஜா விதைகளே.
இரண்டுமே அதிக சத்துக்களைக் கொண்ட குறைந்த கலோரி கொண்ட உணவுகள். சியா விதைளை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியதைப் போல் ஆகிறது. எனவே விளையாட்டு வீரர்களுக்கு இது சிறப்பான உணவாக காணப்படுகிறது.
image - healthy & hygiene