chanakya topic: மனைவியை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமா? இதை செய்ங்க
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிஞராகவும், சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், அரசின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து பிற்காலத்தில் உலக புகழ் பெற்றவர்தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர் வாழ்வில் கடைப்பிடித்த முக்கிய விடயங்கள் மற்றும் அவரின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கணவன் தன்னுடைய மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில முக்கிய விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றார்.
திருமண வாழ்க்கை என்பது இருவரில் யாரோ ஒருவர் இறக்கும் வரையில் இணைந்திருக்க வேண்டும் என்ற கலாசாரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டது ஆகும்.
எனவே தனக்காக வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப்போகும் மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கணவன் முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கணவன் கடைப்பிக்க வேண்டிய விடயங்கள்
சாணக்கியரின் கருத்துப்படி கணவன் தன் விருப்பங்களையும் ஆசைகளையும் முழுமையாக மனைவி மீது திணிக்காமல் மனைவி சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இருவருக்கும் இடையில் வேற்றுமை இருக்க கூடாது. அப்படி இருந்தால் தான் வாழ்க்கை மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்.
கலாசார பின்னணியின் பிரகாரம் மனைவியை கணவன் ஒரு கைபாவையாக பயன்படுத்தும் தன்மை காணப்படுகின்றது.அப்படியல்லாமல் மனைவியின் மனதை புரிந்துக்கொண்டு அவளின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர்.
குறிப்பாக மனைவியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றால், அவரை மதித்து நடக்க வேண்டும். உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இப்படியான உறவை தான் பெண்கள் விரும்புகின்றார்கள். உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மரியாதை தானாக வரும்.
திருமண உறவில் ஏற்படும் வாக்குவாதங்களை கணவன் தன் குடும்பத்ததாருடன் பகிர்ந்துக்கொள்ள கூடாது. இது மனைவியின் மனநிலையை வலுவாக பாதிக்கும். உறவினர்களளிடம் தன்னை விட்டுக்கொடுக்காத கணவனிடம் தான் மனைவி மகிழ்ச்சியாக வாழ முடியும்.
கணவன் மனைவிக்கு உண்மையாக இருக்க வேண்டும். மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கணவனிடம் மனைவி ஒருபோதும் மகிழ்சியாக இருக்க முடியாது. உண்மையான உறவுகள் நம்பிக்கையில் தான் தங்கியிருக்கின்றது.
எனவே மனைவியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றால் மனைவிக்கு நம்பிக்கை கொடுக்கம் வகையில் தனது செயல்களை கட்டமைத்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கை உடையும் போது எந்த உறவாக இருந்தாலும் அதில் விரிசல் ஏற்படும்.
சாணக்கியரின் கருத்துப்படி மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், மனைவிக்கு கணவன் முழுமையான பாதுகாப்பு உணர்வை கொடுக்க வேண்டும். பெண்கள் தாங்களை பாதுகாப்பாக உணர செய்யும் ஆண்களுடனேயே இருக்க விரும்புவார்கள்.
மனைவியைப் பாதுகாக்க முடியாத கணவன் மனைவியுடன் நீண்ட நாட்கள் வாழ முடியாது.கணவன் தன் மனைவியின் திருப்திக்காகவும், மகிழ்ச்சிகாகவும் பாதுகாப்பு உணர்வை கொடுக்க வேண்டியது அவசியம்.
கணவன் மனைவியிடம் ஈகோ இருக்கவே கூடாது. மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டுவதை கணவன் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சமத்துவமான உரிமைகள் கொடுக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றார்கள். அவர்களுடன் வாழ்வதையே மகிழ்சியாக நினைக்கின்றார்கள். எனவே சாணக்கியரின் கருத்துப்படி மனைவியை மகிழ்சிப்படுத்த இந்த விடயங்களையெல்லாம் கணவன் பின்பற்ற வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |