சர்க்கரை அளவை தாறுமாறாக எகிற வைக்கும் உணவுகள் எவை தெரியுமா? தவறிக் கூட சாப்பிடாதீங்க
பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் அதிகமாகவே இருக்கின்றது. ஏனெனில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடும் போது பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
நீரிழிவு நோய்
நபர் ஒருவருக்கு நீரிழிவு நோய் தாக்குதல் ஏற்பட்டால், அவரது சிறுநீரகம், கல்லீரல், இதயம், கண் போன்ற உறுப்புகளும் கட்டாயம் பாதிக்கப்படும். இந்த நீரிழிவு நோய் வருவதற்கு மோசமான உணவும், வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாகும்.
சர்க்கரை நோய் பாதித்தவர்கள் உணவில் அதிகமான கவனம் கொள்ள வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் உணவானது விரைவில் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகரிக்க செய்துவிடும்.
கோதுமை மாவு
இன்று பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளையே அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர். காரணம் இவை சர்க்கரையின் அளவினை குறைப்பதாக நினைக்கின்றோம்.
ஆனால் கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. இதனை பதப்படுத்தி கோதுமை உமி அகற்றப்பட்டு அறைக்கப்படுவதால் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படுகின்றது.
ஆனால் கோதுமையை வாங்கி நீங்களே கோதுமை மாவு தயாரித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவது இல்லையாம்.
சோள மாவு
புரதச்சத்து அதிகம் கொண்ட மக்கச்சோளத்தினை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் சோள ரொட்டியில் புரதத்தை விட கார்போ ஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் இவை சர்க்கரையின் அளவினை வேகமாக அதிகரித்துவிடும்.
வெள்ளை அரிசி மாவு
சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி மாவு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. அரிசி உணவுகளை சர்க்கரை நோயாளிகளில் அளவாக எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக ஒருநாளில் ஒருமுறை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.