நீரிழிவு நோயாளிகள் இந்த இனிப்பான பழங்களை சாப்பிடலாமா? குழப்பத்திற்கு பதில் இதோ
உலகம் முழுவதும் உள்ள நோய்களில் அதிகமானோருக்கு இருப்பது சர்க்கரை நோய் தான். தி லான்செட் இதழ் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2030- ம் ஆண்டுக்குள் சுமார் 98 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமெனில், நீங்கள் உங்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்துக் கொள்வதே சிறந்த வழியாகும்.
சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
பீட்ரூட்
பீட்ரூட் இனிப்பாக உள்ளதால் அதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்று பலரும் கூறுவர். ஆனால், அது தவறானது. ஏனெனில், பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பொதுவாகவே நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
நார்ச்சத்து மட்டுமின்றி, இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிக அளவில் உள்ளன. அதோடு, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பீட்ரூட் பலவேறு நன்மைகளைக் கொடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
சுக்கிரனின் இடமாற்றம்! 3 ராசிகளுக்கு கொட்டும் அதிர்ஷ்டம்
கொய்யாப் பழம்
டயட்டரி பைபர் நிறைந்துள்ள கொய்யாப் பழத்தை உண்பதால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும் என்பதால் உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்.
மேலும், கொய்யாப்பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பைத் தடுக்கும். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இதனை குளிர்கால உணவாக சர்க்கரை நோயாளிகள் தங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பெப்பர் சிக்கன்
ஆரஞ்சு
ஆரஞ்சு மட்டுமின்றி சிட்ரஸ் நிறைந்துள்ள அனைத்து வகை பழங்களும் எல்லோருக்கும் நன்மை தரும் உணவு என்று ஊட்டச்சத்து நிபுணர்களால் குறிப்பிடப்படுகின்றன. குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட ஆரஞ்சு பழத்தை சாலட் மற்றும் பழச்சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.